டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) ஆனது, கிழக்கு டெல்லி மையத்தை குடியிருப்பு, வணிக மற்றும் குடிமை இடங்களை ஒருங்கிணைக்கும் கலப்பு பயன்பாட்டு நகர்ப்புற மையமாக உருவாக்கி வருகிறது.
கர்கர்டூமாவில் மேற்கொள்ளப்படும் டவரிங் ஹைட்ஸ் (Towering Heights) திட்டம் டெல்லியின் முதல் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு (TOD) வீட்டு வசதித் திட்டமாக இருக்கும்.
வாகனப் பயன்பாடு மற்றும் பயண நேரத்தைக் குறைக்க பொதுப் போக்குவரத்து மையங்களைச் சுற்றி கட்டப்பட்ட பாதசாரிகளுக்கு ஏற்ற, கலப்பு-பயன்பாட்டு சுற்றுகளில் TOD கவனம் செலுத்துகிறது.
30 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள கிழக்கு டெல்லி மையம் 70% குடியிருப்பு, 20% வணிக மற்றும் 30% பசுமையான திறந்தவெளிகளைக் கொண்டுள்ளது.
NH-1 மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II ஆகியவற்றை அணுகக் கூடிய 30.35 ஹெக்டேர் பரப்பளவில் நரேலாவில் ஒருங்கிணைந்த பல விளையாட்டு அரங்கத்தை அமைக்க DDA அங்கீகரித்தது.
நரேலாவில் 4.33 ஹெக்டேர் பரப்பளவில், பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கல்வி மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.