TNPSC Thervupettagam

டெல்லி விமான நிலையம்

June 26 , 2022 1068 days 461 0
  • முழுக்க முழுக்க நீர்மின் ஆற்றல் மற்றும் சூரிய சக்தியினால் இயங்கும் நாட்டின் முதல் விமான நிலையம் என்ற பெருமையை டெல்லி விமான நிலையம் பெற்றுள்ளது.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழியக்  கார்பன் உமிழ்வு நிலையைப்   பெற்ற ஒரு விமான நிலையமாக மாறும் உயர் லட்சிய இலக்கை அடைவதற்கான முக்கியப் படி நிலையாகும்.
  • டெல்லி விமான நிலையத்திற்கு 2036 ஆம் ஆண்டு வரை நீர்மின் ஆற்றல் மூலம் மின்சாரம் வழங்குவதற்காக இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நீர்மின் உற்பத்தி நிறுவனத்துடன் ஒரு நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் டெல்லி விமான நிலையம் கையெழுத்திட்டுள்ளது.
  • டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) என்பது GMR உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு ஆகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்