உலகளாவியப் பருவநிலை இலக்குகளுக்கான உள்ளூர் நடவடிக்கை குறித்த டெல்லி பிரகடனம் ஆனது புது டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ARISE நகரங்கள் மன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) 30 வது பங்குதாரர்கள் மாநாட்டிற்கான (COP30) உலகளாவிய தெற்கு நாடுகளிலிருந்து நகர்ப்புற முன்மொழிதல்களை இந்தப் பிரகடனம் அதிகரிக்கிறது.
இது மதிப்பிடக் கூடிய உள்நாட்டுப் பருவநிலை நடவடிக்கைகள், உள்ளடக்கிய வகையிலான பசுமை மாற்றங்கள் மற்றும் நகரங்களுக்கான மேம்பட்ட பருவநிலை நிதி அணுகலை ஊக்குவிக்கிறது.
நகரங்கள் ஆனது முக்கியப் பருவநிலை நடவடிக்கை பங்குதாரர்களாக அங்கீகரிக்கப் பட வேண்டும் என்ற அழைப்பாக, பெலெமில் உள்ள COP30 தலைமைக்கு இந்த ஆவணம் அறிமுகப்படுத்தப் படும்.