டெல்லியின் மாநகராட்சிக் கழகத்தின் ஆல்டர்மேன் நியமனம்
August 19 , 2024 278 days 247 0
டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு (L-G), டெல்லி அரசின் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனை எதுவுமின்றி டெல்லி மாநகராட்சிக் கழகத்திற்கான (MCD) ‘இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர் - ஆல்டர்மேன்களை’ நியமிக்க அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி மாநகராட்சிக் கழக சட்டத்தின் (DMC) கீழ், டெல்லி 12 மண்டலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது.
இந்தச் சட்டமானது ஒவ்வொரு மண்டலத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள் மற்றும் அந்த எல்லைக்குள் உள்ள இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்களை உள் அடக்கிய ‘ஆட்சிப் பிரிவு குழுவினை’ உருவாக்குகிறது.
டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, இந்தச் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ், 25 வயதிற்கு மேற்பட்ட மற்றும் "மாநகராட்சி நிர்வாகத்தில் நல்லறிவு அல்லது அனுபவம் உள்ள" 10 இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்களைப் பரிந்துரைக்க அதிகாரம் உள்ளது.
இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்களுக்கு MCDயின் கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
12 ஆட்சிப் பிரிவு குழுக்கள் ஒவ்வொன்றும் தங்கள் முதல் கூட்டத்தில் MCD நிலைக் குழுவின் ஓர் அங்கமாக விளங்கும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்கள் இந்தத் தேர்தல்களில் வாக்களிக்கலாம் மற்றும் நிலைக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வேட்பாளர்களாக நிற்கலாம்.
மேயர் MCD கழகத்தின் பெயரளவிலான தலைவராக உள்ள நிலையில், அதன் நிலைக் குழு ஆனது மாநகராட்சியின் செயல்பாடுகளை திறம்பட நிர்வகிக்கிறது.
இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்கள் யாவரும் வாக்களிக்கும் செயல்முறையில் பங்கேற்காமல் இக்குழுவை அமைக்க முடியாது.