TNPSC Thervupettagam

டெல்லியில் நுண்பாசி காற்று கோபுரம்

March 31 , 2026 12 hrs 0 min 12 0
  • வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க, இந்தியாவின் முதல் நுண்பாசி அடிப்படையிலான காற்று கோபுரம் புது தில்லியில் நிறுவப்பட்டுள்ளது.
  • புதிய மாசு கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தைச் சோதிப்பதற்கான ஒரு சோதனைத் திட்டமாக ஏரோசிட்டி நெடுஞ்சாலைக்கு அருகில் இந்தக் கோபுரம் அமைக்கப் பட்டு உள்ளது.
  • இது கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் நுண் துகள்கள் போன்ற மாசுபடுத்திகளை உறிஞ்சுவதற்கு நுண்பாசிகள் மற்றும் ஒளிச்சேர்க்கை முறையைப் பயன்படுத்துகிறது.
  • மாசுபட்ட காற்று கோபுரத்திற்குள் இழுக்கப்பட்டு, இயற்கையான முறையில் ஆக்ஸிஜன் மற்றும் பாசி உயிர்ப்பொருளாக மாற்றப்படுகிறது.
  • இது நகர்ப்புறக் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான இயற்கையைச் சார்ந்த மற்றும் நிலையான ஒரு முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்