டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது மாற்று வீரர்
August 27 , 2019 2209 days 806 0
2வது ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மர்னுஸ் லபூஸ்சக்னே என்பவர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஏற்பட்ட மூளை பாதிப்பின் காரணமாக அவருக்குப் பதிலாக களமிறங்கும் முதலாவது மாற்று வீரராக உருவெடுத்துள்ளார்.
மேலும் இவர் டெஸ்ட் தொடரில் பேட்டிங் செய்யும் முதலாவது மாற்று வீரராகவும் உருவெடுத்துள்ளார்.
இது போன்ற ஒரு நடவடிக்கைக்கு சர்வதேசக் கிரிக்கெட் ஆணையம் 2019 ஆம் ஆண்டு ஜூலை அன்று ஒப்புதல் வழங்கியது.
மூளை பாதிப்புப் பற்றி
மூளை பாதிப்பானது மூளையின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக பாதிக்கின்றது.
அறிகுறிகள்: நினைவு இழப்பு, நினைவாற்றல் இழப்பு, தலைவலி, செறிவு அல்லது சமநிலை மற்றும் சிந்திப்பதில் சிரமம், குமட்டல், மங்கலான பார்வை, தூக்கக் கலக்கம் மற்றும் மனநிலை மாற்றங்கள்.