துருக்கியின் டேஃபன் பிளாக்-4 என்பது பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான ரோகெட்சன் உருவாக்கிய அதன் முதல் அதி மீயொலி உந்துவிசை எறிகணை ஆகும்.
800 கிலோ மீட்டர் செயல்பாட்டு வரம்பைக் கொண்டுள்ள இந்த எறிகணையின் செயல்பாட்டு வரம்பானது 1,000 கிலோ மீட்டர் வரை நீட்டிக்கக் கூடியது மற்றும் மேக் 5 வேகத்தை தாண்டி இது பயணிக்கும்.
இது 5 மீட்டருக்குள்ளான தாக்குதல் துல்லியத்திற்காக GPS + GLONASS உதவியுடன் கூடிய நிலைம வழி செலுத்தல் அமைப்பை (INS) பயன்படுத்துகிறது.