TNPSC Thervupettagam

டேவிஸ் நீர்ச்சந்தி பழங்கால சிறு கண்டம்

April 27 , 2025 3 days 26 0
  • டேவிஸ் நீர்ச்சந்தியின் உறைந்த நீர்ப்பரப்பின் கீழ் புதிய நிலப்பரப்பு கண்டறியப் பட்டு உள்ளது.
  • இந்த நீர்ச்சந்தியானது, கனடாவில் உள்ள பாஃபின் தீவிற்கும் கிரீன்லாந்து நாட்டிற்கும் இடையிலான குறுகிய கடல் சார் கால்வாய் ஆகும்.
  • புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த நிலப்பரப்பு ஆனது, தற்போது டேவிஸ் நீரச் சந்தி பழங்கால சிறு கண்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • இது அசாதாரணமான தடிமனான கண்ட மேலடுக்கினால் ஆனது என்பதோடு மேலும், சுமார் 12 முதல் 15 மைல்கள் (சுமார் 19 முதல் 24 கிலோமீட்டர்) அகலம் கொண்டது.
  • சிறு கண்டங்கள் என்பது நீண்டு காணப்படும் நிலப்பரப்புகளிலிருந்து பிரிக்கப்பட்ட, ஆனால் முக்கிய கண்டத் தட்டு நகர்வுகளில் முழுமையாகப் பிரிக்கப்படாத கண்ட மேலடுக்கின் துண்டுகளாகும்.
  • இந்தப் பழங்கால சிறு கண்டமானது, கிரீன்லாந்து மற்றும் வட அமெரிக்கா பிளவுபட்ட போது அது பகுதியளவு இணைந்துக் காணப் பட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்