டைகர் TRIUMP என்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீரிலும் நிலத்திலும் நடத்தப்படும் முதலாவது முப்படைப் பயிற்சியாகும்.
இது நவம்பர் 13 ஆம் தேதி முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடா ஆகிய நகரங்களுக்கு அருகே நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
டைகர் TRIUMP என்றப் பயிற்சியானது ஒருங்கிணைந்த பாதுகாப்பு கட்டுப்பாட்டகத் தலைமையகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
இந்தத் தனித்துவமானப் பயிற்சியானது மனிதாபிமான உதவிகளுக்கான களப் பயிற்சி மற்றும் கப்பலில் இருந்து கரைக்கு செல்லும் பேரிடர் மீட்புப் படையினருக்கான பயிற்சி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.