டைம்ஸ் இதழின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்கள் – 2023
June 27 , 2023 790 days 472 0
டைம்ஸ் இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான மிகவும் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்ற இரண்டு இந்திய நிறுவனங்கள் இந்தியத் தேசியப் பண வழங்கீட்டுக் கழகம் (NPCI) மற்றும் மீஷோ ஆகியவை மட்டுமே ஆகும்.
இந்தியத் தேசியப் பண வழங்கீட்டுக் கழகமானது, 2008 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றினால் நிறுவப்பட்டது.
ஒரு இணைய வர்த்தகச் செயலியான மீஷோ, விதித் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால் ஆகியோரால் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.