டொனால்ட் டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் – அமெரிக்க அவை
December 21 , 2019 2035 days 638 0
அமெரிக்க அவையால் (மக்கள் பிரதிநிதித்துவச் சபை) குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கத்திற்குப் பரிந்துரைக்கப்படும் மூன்றாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
2020 தேர்தலுக்கு முன்னர் தனது அரசியல் போட்டியாளரை விசாரிக்க வெளிநாட்டு அரசாங்கத்தை அணுகியதற்காக இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது.
தற்சமயம் செனட் (மேல்சபை) சபையில் இவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும். இவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு அச்சபையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறுவது அவசியமாகும்.
இதுவரை இரண்டு அமெரிக்க அதிபர்கள் (பில் கிளிண்டன் & ஆண்ட்ரூ ஜான்சன்) மட்டுமே குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் செனட் சபையால் விடுவிக்கப்பட்டு விட்டனர்.