TNPSC Thervupettagam

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா

September 9 , 2021 1343 days 652 0
  • இந்தப் பதிப்பில் சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது (மொத்தம் - 207, அதில் 96 தங்கம், 60 வெள்ளி மற்றும் 51 வெண்கலம்).
  • 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் போட்டியில் இருந்து கணக்கெடுத்தால் ஐந்தாவது முறையாக சீனா பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்றது.
  • துப்பாக்கி சுடுதல், ஈட்டி எறிதல், பாட்மிண்டன், தடகளம் மற்றும் வில்வித்தை உள்ளிட்ட ஐந்து விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியப் பாரா-தடகள வீரர்களால் 19 பதக்கங்கள் பெறப்பட்டன.
  • ஒட்டு மொத்தப் பதக்கங்களின் அடிப்படையில் 162 நாடுகளில் இந்தியா 24வது இடத்தில் உள்ளது.
  • பாராலிம்பிக்கில் இந்தியா முதன்முதலில் 1968 ஆம் ஆண்டில் பங்கேற்றது.
  • 1968 முதல் 2016 வரை இந்தியா 12 பதக்கங்களை மட்டுமே வென்றது.
  • இந்தியா ரியோ 2016 ஆம் ஆண்டில் நான்கு பதக்கங்களையும் 1984 பாராலிம்பிக்கில் நான்கு பதக்கங்களையும் வென்றது.
  • பாராலிம்பிக்கில் பேட்மிண்டன் மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுகள் சேர்க்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • டோக்கியோ நகரம் 1964 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டியை நடத்திய பின்னர் இரண்டு பாராலிம்பிக் போட்டிகளை நடத்திய முதல் நகரமாக உருவெடுத்து உள்ளது.
  • டோக்கியோ பாராலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியாவின் கொடியை ஏந்தியவர் அவனி ஆவார்.
  • டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் அவனி லேகாரா, ஈட்டி எறிதல் வீரர் சுமித் அண்டில், துப்பாக்கி சுடும் வீரர் மணீஷ் நர்வால் மற்றும் பாட்மிண்டன் வீரர்கள் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நாகர் ஆகியோர் அடங்குவர்.
  • தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர் அவனி லேகாரா,  வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற சிங் ராஜ் அதானா ஆகியோர் தலா இரண்டு பதக்கங்களுடன் இந்தியாவின் முன்னணி வீரர்களாக உள்ளனர்.

பதக்கம் வென்ற மற்ற வீரர்கள்

  • இந்தியாவின் வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், ஆண்களுக்கான தனிப்பட்ட ரீகர்வ் ஓபனில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வில்வித்தை வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
  • பி 4 - கலப்பு 50 மீ பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் (ஷூட்டிங்) இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களான மணீஷ் நர்வால் மற்றும் சிங் ராஜ் அதானா ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
  • நொய்டாவின் தற்போதைய மாவட்ட நிர்வாக அதிகாரி சுஹாஸ் யதி ராஜ், பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
  • அவர் பேட்மிண்டன் எஸ்எல் 4 என்பதின் இறுதிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • பேட்மிண்டன் எஸ்எல் 3 பிரிவில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரமோத் பகத் மற்றும் மனோஜ் சர்க்கார் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர்.
  • பாராலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பேட்மிண்டன் தங்கத்தை பிரமோத் பெற்றார்.
  • கிருஷ்ணா நாகர் இந்தியாவுக்கு இரண்டாவது பாரா-பாட்மிண்டன் தங்கத்தை வென்றார்.
  • இவர் SH6 பிரிவில் இந்தியப் பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்