அலையன்ஸ் ஏர் எனப்படும் விமானத் தயாரிப்பு நிறுவனத்தினால் இந்தியாவிலேயேத் தயாரிக்கப்பட்ட டோர்னியர் 228 என்ற விமானமானது திப்ருகர்-பாசிகாட் வழித் தடத்தில் தனது முதல் வணிகப் பயணத்தை மேற்கொண்டது.
அலையன்ஸ் ஏர் என்ற விமானப் போக்குவரத்து நிறுவனமானது, பொதுமக்கள் போக்குவரத்திற்காக இந்தியாவிலேயேத் தயாரிக்கப்பட்ட விமானங்களை இயக்கிய இந்தியாவின் முதல் வணிக விமானப் போக்குவரத்து நிறுவனம் ஆகும்.
இதன் முதல் பயணம் அசாமில் உள்ள திப்ருகர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாசிகாட் ஆகிய நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டது.