டோலுடெக்ராவிர் பற்றிய உலக சுகாதார அமைப்பின் அறிக்கை
March 11 , 2024 509 days 457 0
உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின்படி, HIV நோயாளிகள் மத்தியில் டோலுடெக்ராவிர் எனப்படும் HIV எதிர்ப்பு மருந்து சிகிச்சை மருந்திற்கான எதிர்ப்புத் திறன் அதிகரித்து வருகிறது.
2018 ஆம் ஆண்டு முதல், உலக சுகாதார அமைப்பானது அதன் செயல்திறன், பயன்பாட்டின் எளிமை மற்றும் குறைந்த பக்க விளைவுகள் காரணமாக டோலுடெக்ராவிர் மருந்தினை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்துவதற்கான முதல் மற்றும் இரண்டாம் நிலை நிலை HIV சிகிச்சையாக பரிந்துரைத்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், உலகளவில் HIV பாதிப்புடன் வாழும் 39 மில்லியன் மக்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் HIV சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் புதிய HIV தொற்றுகளும், 630,000 HIV தொடர்பான உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.