ரஷ்யாவின் ட்ருஷ்பா எண்ணெய் குழாய் தடத்தில் மேற்கொள்ளப்பட்ட உக்ரைனின் ஆளில்லா விமானம் மற்றும் எறிகணைத் தாக்குதல்களை அடுத்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா எண்ணெய் விநியோக இடையூறுகளை எதிர்கொண்டுள்ளதாக அறிவித்தன.
ரஷ்ய எண்ணெயை ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு கொண்டு செல்கின்ற ட்ருஷ்பா குழாய் தடமானது, ரஷ்ய-பெலாரஷ்ய எல்லைக்கு அருகில் செல்கிறது.
2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு விதிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து ட்ருஷ்பா குழாய் தடத்திற்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.