இந்தியக் கடற்படையானது தனது முதன்மையான கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியான ட்ரோபெக்ஸ் -2019 (Theatre Level Operational Readiness Exercise -TROPEX) எனும் பெரிய அளவிலான பயிற்சியினை 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை நடத்தவுள்ளது.
கடலோரப் பாதுகாப்பு உபகரணங்களின் முழு வலிமையினை சோதிப்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
ட்ரோபெக்ஸ் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படையானது மிகப்பெரிய அளவிலான கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியான ‘கடல் கண்காணிப்புப் பயிற்சியை’ (Exercise Sea Vigil) நடத்தவுள்ளது.
இந்த பயிற்சியானது நிலப்பகுதி மற்றும் தீவுப் பகுதிகளில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கும்.
இது மேற்கு கடற்கரைப் பகுதியில் நடக்கும் வருடாந்திரப் பயிற்சியாகும்.
இது இந்தியக் கடற்படை, இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடலோரக் காவல் படை ஆகியவற்றின் போர்த் திறனைச் சோதிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.