தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ உள்ளடக்கம்
October 10 , 2018 2467 days 818 0
மத்திய தகவல் ஆணையமானது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கொணர்ந்துள்ளது.
தகவல் உரிமை விவகாரங்களுக்கான உச்ச அமைப்பான இந்த தகவல் ஆணையம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தன்மை, நிலை மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் ஆகியன தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h) என்பதுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளது.
இச்சட்டத்தின் பிரிவு 2(h) என்பது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த அமைப்புகள் பொது அமைப்புகளாக தகுதி பெறும் என்ற விதியை விளக்குகின்றது.