தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் திருத்தப்பட்ட விதிகள் – அறிவிப்பு
October 28 , 2019 2127 days 705 0
தகவல் அறியும் உரிமை (பதவிக் காலம், சம்பளம், கொடுப்பனவுகள், பிற தகவல் விதிமுறைகள் மற்றும் தலைமைத் தகவல் ஆணையர், தகவல் ஆணையர்கள் மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் சேவை விதிமுறைகள்) விதிகள், 2019 என்பதை மத்தியப் பணியாளர் துறை அமைச்சகம் அறிவிக்கையாக வெளியிட்டது.
புதிய விதிகள் தகவல் ஆணையர்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்றாகக் குறைத்துள்ளது.
"சேவை நிலைமைகள்" குறித்து முடிவு செய்வதற்கான விருப்பத்தை இது அரசாங்கத்திற்கு அளிக்கிறது. அதற்காக இந்தப் புதிய விதிகளில் வெளிப்படையான கூறுகள் எதுவும் குறிப்பிடப் படவில்லை.
தலைமைத் தகவல் ஆணையரின் சம்பளம் ₹2.5 லட்சமாகவும், மற்ற தகவல் ஆணையரின் சம்பளம் ₹2.25 லட்சமாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.