தகவல் சமூகம் மீதான உலக மாநாடு மன்றம் 2021 (World Summit on the Information Society – Wsis) என்ற மாநாடானது “வளர்ச்சிக்கான தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பச் சமுதாயத்தின் உலகின் மிகப்பெரிய வருடாந்திர ஒன்றிணைவாகும்.”
இம்மன்றம் யுனெஸ்கோ, ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம்,ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு மற்றும் சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
பாரத்நெட் என்ற முதன்மை திட்டத்தின் கீழ், 4,00,000 கி.மீக்கும் மேலான நீளத்திற்கு ஒளியிழை கம்பி வடங்களை அமைப்பதன் மூலம் செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 6,00,000 கிராமங்கள் இணைக்கப் படுகின்றன என்று தொலைதொடர்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடலுக்கடியில் மூழ்கிய கம்பிவட அமைப்புகள் மூலம் சிறிய மற்றும் தொலைதூர தீவுகளான அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் மற்றும் இதர அணுக இயலாத பகுதிகள் அரசின் நிதியுதவியுடன் இணைக்கப்படுகின்றன.