TNPSC Thervupettagam

தகவல் தொழில்நுட்ப மீள்திறன் குறியீடு - செபி

September 21 , 2026 15 hrs 0 min 21 0
  • இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கான (MII) தகவல் தொழில்நுட்ப மீள்திறன் குறியீட்டை (ITRI) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • கிடைக்கும் தன்மை, பாதுகாப்பு, நேர்மை, ஆளுமை, நம்பகத்தன்மை, வணிகத் தொடர்ச்சி மற்றும் விரிவாக்கம் உள்ளிட்ட ஒன்பது அளவுருக்களின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ITRI மதிப்பிடும்.
  • கிடைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை தலா 20% அதிகபட்ச முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
  • MII-கள் தகவல் தொழில்நுட்ப அபாயங்களைக் கண்டறிய முன் எச்சரிக்கை அமைப்பை (EWS) உருவாக்கி, அரையாண்டுக்கு ஒருமுறை ITRI-ஐ கணக்கிட வேண்டும்.
  • EWS மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு உள்ளிட்ட முழுமையான செயல்பாடுகள் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்