மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது, 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் 3(1)(d) விதியை, தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) திருத்த விதிகள், 2025 மூலம் திருத்தியுள்ளது.
இந்த திருத்தங்கள், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
சட்டவிரோத இயங்கலை வழி உள்ளடக்கத்தை அகற்றுவதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல் மற்றும் தீவிரத்தினை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
காவல்துறையின் இணைச் செயலாளர் அல்லது காவல் துறையின் துணைத் தலைமை ஆய்வாளர் (DIG) ஆகிய தரத்திற்கு கீழே இல்லாத மூத்த நிலை அதிகாரிகள், தற்போது இடைத்தரகர்களுக்கு நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வழங்க அதிகாரம் பெற்று உள்ளனர்.
அறிவிப்புகள் சட்டத்தின் அடிப்படைத் தன்மை, சட்டவிரோத உள்ளடக்கத்தின் தன்மை மற்றும் சரியான URL அல்லது மின்னணு இருப்பிடத்தைக் குறிப்பிடும் "நியாயமான தகவல்களாக" இருக்க வேண்டும்.
அனைத்து நீக்குதல் அறிவிப்புகளும், தேவை, செயற்தீவிரம் மற்றும் சட்டத்துடன் இணங்குவதை உறுதி செய்வதற்காக, செயலாளர் நிலை அதிகாரியால் மாதாந்திர அளவில் மதிப்பாய்வு செய்யப்படும்.