தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கான சர்வதேச தினம் 2023 - ஏப்ரல் 27
April 30 , 2023 974 days 304 0
இது ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் நான்காவது வியாழன் அன்று கொண்டாடப் படும் ஒரு தினமாகும்.
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் (ICT) ஆய்வு மேற்கொள்வதற்கும், தொழிலில் ஈடுபடுவதற்கும் வேண்டி பெண்கள் மற்றும் இளம் பெண்களை ஊக்குவித்து, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று சர்வதேசத் தொலைத் தொடர்பு ஒன்றியத்தால் (ITU) அறிவிக்கப் பட்டது.
இந்த ஆண்டிற்கான கருத்துரு "வாழ்க்கைக்கான டிஜிட்டல் திறன்கள்" என்பதாகும்.