தகுதி அடிப்படையிலான தேசியக் கல்வி உதவித்தொகைத் திட்டம்
February 10 , 2020 2023 days 666 0
இடை நிலை மற்றும் உயர் நிலை வகுப்புகளில் மாணவ மாணவியரின் இடைநிற்றல் விகிதத்தை குறைப்பதற்குத் “தகுதி அடிப்படையிலான தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம்” உதவியுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் நோக்கமானது பொருளாதார ரீதியாக மோசமான நிலையில் உள்ள திறமையான மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதே ஆகும்.
இந்தத் திட்டமானது 2008 ஆம் ஆண்டில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12000 வழங்கப் படுகின்றது மற்றும் இந்த உதவித் தொகையின் தொடர்ச்சி / புதுப்பித்தலானது பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வரை வழங்கப் படுகின்றது.