மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் தத்து ரானே தகைசால் கதர் (காதி) மையத்தினைச் சமீபத்தில் திறந்து வைத்தார்.
இந்தச் சிறப்பு கதர் மையமானது புது டெல்லியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (NIFT) அமைந்துள்ளது.
சமீபத்திய ஆடை வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துவது மற்றும் உலகளாவிய தரத்தை ஒத்த புதிய துணிகளை உருவாக்குவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்றவை இந்த மையத்தின் முக்கியப் பணிகளாகும்.