2026 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் (TNCC) முன்னாள் தலைவர் திரு. எம். கிருஷ்ணசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
இவர் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை வந்தவாசி மக்களவைத் தொகுதியையும், 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆரணி மக்களவைத் தொகுதியையும் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய சிறந்த நபர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது 2021 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இவ்விருது ரூபாய் 10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை உள்ளடக்கியது.
என். சங்கரய்யா (2021), ஆர். நல்லகண்ணு (2022), கி. வீரமணி (2023), குமரி அனந்தன் (2024) மற்றும் கே. எம். காதர் மொய்தீன் (2025) ஆகியோர் இதற்கு முன் இவ்விருதினைப் பெற்றவர்களாவர்.