தங்கர் சமூகத்தினரின் மேய்ச்சல் இடங்களுக்கான கோரிக்கை
August 31 , 2024 352 days 244 0
தங்கர் சமூகத்தினர் மகாராஷ்டிராவில் உள்ள ஆயர் மற்றும் நாடோடி பழங்குடியினக் குழுவாகும்.
செம்மறி ஆடுகளை மேய்ப்பதற்கான இடங்கள் குறைந்து வருவதால் வழக்கமான மேய்ச்சல் நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் புலம்பெயரும் வகையிலான மேய்ச்சல் நடைமுறைகளுக்குப் பெரும் புகழ் பெற்றவர்கள் என்பதோடு, அவர்கள் தங்களின் கால்நடைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக வேண்டி வழக்கமாக பரந்த தொலைவுகளை நோக்கிப் பயணிக்கின்றனர்.
1996 ஆம் ஆண்டில், அந்த மாநில அரசானது தியானங்கங்கா என்ற வனவிலங்குச் சரணாலயத்தினை அறிவித்த பிறகு அவர்கள் தங்களின் மேய்ச்சல் நிலத்தின் பெரும் பகுதியினை இழந்தனர்.
இந்தச் சமூகத்தினர் 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப் பட்ட மேய்ச்சல் பகுதிகளை கோருகின்றனர்.