April 13 , 2026
5 days
70
- தஞ்சாவூர் அருகே உள்ள நெல் வயல்களில் ஒரு அரிய வகை வெண்கழுத்து நாரை தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
- வெண்கழுத்து நாரை (சிகோனியா எபிஸ்கோபஸ்) என்பது நாரைக் குடும்பத்தை சேர்ந்த (சிகோனியிடே) ஒரு பெரிய வகை நீர்ப்பறவையாகும்.
- ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் காணப்படுகின்ற இந்த பறவையானது வெள்ளை கழுத்து நாரை அல்லது பிஷப் நாரை என்றும் அழைக்கப்படுகிறது.
- இவை தங்களுக்கு உணவு கிடைக்கும் ஈரநிலங்கள், ஆற்றங்கரைகள், குளங்கள், புல்வெளிகள் மற்றும் விவசாய நிலங்களை பெரிதும் விரும்புகின்றன.
- வாழ்விட இழப்பு மற்றும் ஈரநிலச் சீரழிவு காரணமாக IUCN-ஆல் இது அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Post Views:
70