தடுப்பூசி போட்ட பிறகு கடுமையான பக்கவிளைவுகள் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு "குற்றமற்றப் பொறுப்புரிமை இழப்பீட்டுக் கொள்கையை" உருவாக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றமற்றப் பொறுப்புரிமை என்பது, அரசு அல்லது தடுப்பூசி உற்பத்தியாளர்களின் அலட்சியத்தை/தவறை நிரூபிக்காமலேயே பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் நிதி இழப்பீட்டைப் பெற முடியும் என்பதாகும்.
அரிய வகை தடுப்பூசி சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பது, சரத்து 21 இன் கீழ் (வாழும் உரிமை) அரசின் கடமையாகும் என்று நீதிமன்றம் கூறியது.
பக்கவிளைவுகள் AEFI (தடுப்பூசி செலுத்தலுக்குப் பின் ஏற்படும் ஒவ்வாமை நிகழ்வுகள்) குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
தடுப்பூசியால் ஏற்படக்கூடிய அரிதான கடுமையான பக்கவிளைவுகளில் மயோ கார்டிடிஸ், பெரிகார்டிடிஸ் (இதய வீக்கம்) மற்றும் TTS (இரத்த உறைவு மற்றும் இரத்தத் தட்டு அணுக்கள் குறைவு நோய்க்குறி - ஒரு அரிய ரத்த உறைதல் கோளாறு) ஆகியவை அடங்கும்.