தடுப்பூசி வழங்கீட்டில் உள்ள இடைவெளி குறித்த தரவரிசை
June 29 , 2025 58 days 89 0
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1.44 மில்லியன் "zero-dose - எந்த தடுப்பூசியும் பெறாத" குழந்தைகள் இருந்தனர் என்ற நிலையில் இது 2.5 மில்லியன் எண்ணிக்கை கொண்ட நைஜீரியாவிற்கு அடுத்தபடியாக உள்ளது.
"zero-dose" குழந்தைகள் என்பது ஒரு வழக்கமான குழந்தைப் பருவ தடுப்பூசியைக் கூட பெறாத குழந்தைகள் ஆவர்.
இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் எட்டு நாடுகளில் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர்.
இந்த 8 நாடுகளும் சேர்ந்து உலகளாவிய எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டுள்ளன.
உலகளாவிய நோய்ப் பாதிப்பு மதிப்பீடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு புதிய லான்செட் ஆய்வறிக்கையிலிருந்து இந்தத் தரவு பெறப்பட்டது.
இந்தியாவின் பொது நோய்த் தடுப்புத் திட்டத்தின் (UIP) கீழ் 12 நோய்களுக்குத் தடுப்பூசி வழங்கப் படுகிறது, ஆனால் அதன் வழங்கீட்டில் இடைவெளிகள் உள்ளன.
உலகளவில், 1980 ஆம் ஆண்டில் 58.8 மில்லியனாக இருந்த எந்தத் தடுப்பூசியும் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் சுமார் 14.7 மில்லியனாகக் குறைந்துள்ளது.