தடுப்பூசிகளை உருவாக்க புதிய மாதிரி – உயிரித் தொழில்நுட்பத் துறை
September 21 , 2019 2062 days 717 0
கட்டுப்படுத்தப்பட்ட மனித நோய்த் தொற்று மாதிரியைப் (Controlled Human Infection Model - CHIM) பயன்படுத்தி புதிய இன்ஃப்ளூயன்ஸா (குளிர் காய்ச்சல்) தடுப்பூசிகளை உயிரித் தொழில்நுட்பத் துறை உருவாக்க இருக்கின்றது.
CHIMஇன் கீழ், இந்தச் சோதனைகளில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் தொற்று வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் அவர்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாக இருக்கின்றனர்.
இந்த அணுகுமுறையானது செயல்முறையைத் துரிதப்படுத்தும். இதன் மூலம் திறனுள்ள தடுப்பூசியானது மக்களுக்குப் பயனுள்ளதா என்பதை விஞ்ஞானிகள் கண்டறிய முடியும்.
மேலும் இது தடுப்பூசி போடப்பட்ட சிலர் ஏன் நோய்வாய்ப்படுகிறார்கள் ஆனால் மற்றவர்கள் ஏன் நோய்வாய்ப்படவில்லை என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளையும் அடையாளம் காணுகின்றது.
குறிக்கோள்
காலரா அல்லது குடற்காய்ச்சல் போன்ற பாக்டீரியா அல்லது நுரையீரல் வைரஸ்களை (குடலில் இருக்கும்) ஆய்வு செய்வதற்கு CHIM நெறிமுறைகளைப் பயன்படுத்துதல்.
இது வெற்றி பெற்றால், தற்போதுள்ள காலரா மற்றும் டைபாய்டு தடுப்பூசிகளுக்கு காப்புத் தடுப்பூசிகளை உருவாக்க உதவும்.