நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவானதையடுத்து, கனடா 2025 ஆம் ஆண்டில் தட்டம்மை ஒழிப்பு நிலையை இழந்தது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இந்தத் தொற்றானது பல மாகாணங்கள் மற்றும் வடமேற்குப் பிரதேசங்களில் பாதிப்பினை ஏற்படுத்தியது.
மிகவும் தொற்றுமிக்க தட்டம்மையானது, இருமல் மற்றும் தும்மல் வழியாக காற்றில் பரவுகிறது என்பதோடுமேலும் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லா (MMR) தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடியது.
கனடாவில் 2019 ஆம் ஆண்டில் 89.5 சதவீதமாக இருந்த தடுப்பூசி வழங்கீடு ஆனது 2023 ஆம் ஆண்டில் 82.5 சதவீதமாகக் குறைந்தது என்பதோடுஇது பெருமளவிலான நோய் எதிர்ப்பு உருவாக்கத்திற்குத் தேவையான 95 சதவீதத்தை விடக் குறைவாகும்.