TNPSC Thervupettagam

தண்ணீர் ஏற்பு மற்றும் பதிலெதிர்ப்பு செயல்திட்டம்

November 19 , 2022 973 days 415 0
  • முன்னதாக தண்ணீர் ஏற்பு அல்லது பதிலெதிர்ப்பு மீதான செயல் என்று அறியப்பட்ட தண்ணீர் ஏற்பு மற்றும் பதிலெதிர்ப்புச் செயல்திட்டத்தை 27வது உறுப்பினர்களின் மாநாடானது வெளியிட்டு இருக்கின்றது.
  • இது குறிப்பாக ஆப்பிரிக்காவின் கொம்பு முனைப் பகுதியில் வறட்சியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆப்பிரிக்காவிற்கு முன்னுரிமைக் கவனம் என்ற ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • இது ஆப்பிரிக்க ஒன்றியம், தண்ணீர் மற்றும் பருவநிலைக் கூட்டணித் தலைவர்கள், உலக வானிலை அமைப்பு மற்றும் தண்ணீருக்கான ஆப்பிரிக்காவின் மந்திரிகள் மன்றம் மற்றும் இன்ன பிறர் ஆகியோரது ஒத்துழைப்பின் ஒரு விளைவாகும்.
  • இது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேண்டிய நீரின் பற்றாக்குறை மற்றும் கிடைக்குந் தன்மைத் தகவலைப் புரிந்து கொள்ள உதவிடும் துல்லிய நீரியல் தரவுகள், தண்ணீர் மற்றும் பருவநிலை குறித்தக் கணக்கெடுப்பு மற்றும் உறைபனி மண்டலம் மீதான தகவல் அமைப்பு போன்ற உலகளாவியத் தண்ணீர்த் தகவல் சேவைகளைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்