தண்ணீர் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சாகச அமைப்பு
April 25 , 2021 1666 days 809 0
தண்ணீர் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சாகசஅமைப்பு (Water sports & Adventure Institute – WSAI) ஒன்றினை உத்தரகாண்டிலுள்ள தெகிரி அணைக்கட்டில் இந்திய திபெத்திய எல்லைக் காவல்படை நிறுவியுள்ளது.
இந்த அமைப்பானது முதல்வர் திராத்சிங் ராவத் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவினால் திறந்து வைக்கப் பட்டது.
அவுலியிலுள்ள (Auli) இந்திய திபெத்திய எல்லைக் காவல்படையின் மலையேற்ற மற்றும் பனிச்சறுக்குப் போட்டிகள் நிறுவனம் இதை சுயாதீனமாக இயக்கும்.
இந்த அமைப்பானது வான், நீர் மற்றும் நிலம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சாகச நிகழ்வுகளில் பயிற்சி வழங்கும்.