TNPSC Thervupettagam

தத்தெடுக்கும் தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு

March 20 , 2026 11 hrs 0 min 23 0
  • தத்தெடுக்கும் தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பில் விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பை இந்திய உச்ச நீதிமன்றம் அரசியலமைப்புக்கு எதிரானது என ரத்து செய்து உள்ளது.
  • சமூகப் பாதுகாப்புக் குறியீடு, 2020 இன் பிரிவு 60(4), அரசியலமைப்பின் 14 மற்றும் 21 ஆகிய சரத்துகளின் கீழ் சமத்துவம் மற்றும் வாழ்வுரிமையை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல் தத்தெடுக்கும் தாய் மார்களுக்கு 12 வார மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முந்தைய விதியானது, மூன்று மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுப்பவர்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்கிய நிலையில் அது நடைமுறைக்கு மாறானது மற்றும் பாரபட்சமானது என நீதிமன்றம் கூறியது.
  • சமூகப் பாதுகாப்புச் சலுகைகளின் ஒரு பகுதியாக தந்தைவழி விடுப்பையும் பரிசீலிக்குமாறு நீதிமன்றம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்