தனிநபர் சில்லறை பணவழங்கீட்டுப் பழக்கங்கள் மீதான ஆய்வு
January 2 , 2019 2428 days 797 0
இந்திய ரிசர்வ் வங்கியானது தனிநபர் சில்லறை பணவழங்கீட்டுப் பழக்கங்கள் மீதான ஒரு ஆய்வைத் தொடங்கியுள்ளது.
இந்த ஆய்வானது பணவழங்கீட்டுப் பழக்கங்கள் குறித்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் கௌகாத்தி ஆகிய நகரங்களில் உள்ள தனிநபர்களிடம் இருந்து தகவல்களைப் பதிவு செய்யும்.
இந்த கணக்கெடுப்பானது வெவ்வேறு சமூக-பொருளாதார பின்னணியில் உள்ள சுமார் 6000 தனிநபர்களிடமிருந்து அவர்களது பணவழங்கீட்டுப் பழக்கங்களைப் பற்றிய தரமான பதில்களை எதிர்பார்க்கிறது.
இதன் களப்பணியில் ரிசர்வ் வங்கியின் சார்பாக சிக்மா ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமானது கணக்கெடுப்பை நடத்துவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.