சமூக இணைப்புக்கான உலக சுகாதார அமைப்பின் ஆணையமானது, 'From loneliness to social connection: charting a path to healthier societies' என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, 2014 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளவில் ஆறு பேரில் ஒருவர் தனிமை நிலையை எதிர்கொண்டனர்.
தனிமை நிலையானது ஆண்டுதோறும் சுமார் 871,000, அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 100 உயிரிழப்புகளுக்கு காரணமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இளையோர்கள் (13 முதல் 29 வயதுடையவர்) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இருதய நோய், பக்கவாதம், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் முன் கூட்டிய மரணம் ஆகியவை இதனால் ஏற்படும் சுகாதார அபாயங்களில் அடங்கும்.
ஆனால் சமூகத்துடன் இணைந்து இருத்தலானது நோய் அபாயத்தைக் குறைத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது.
இது மோசமான உடல்நலம், குறைந்த வருமானம், தனியாக வாழ்வது மற்றும் அதிகப் படியான திரை நேரம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
இந்த அறிக்கையானது கொள்கை மாற்றம், பொது விழிப்புணர்வு, சிறந்த தரவு மற்றும் சமூக வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்க கோருகிறது.
பாதுகாப்பானப் பொது இடங்கள் மற்றும் உள்ளூர் மகிழ்ச்சிகரச் செயல்பாடுகள் சமூக தனிமைப்படுத்தலைக் குறைக்க உதவும்.