TNPSC Thervupettagam

தனியார் சொத்து தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

January 19 , 2020 2034 days 829 0
  • தனியார் சொத்துக்களை வைத்திருப்பதற்கான குடிமகனின் உரிமையானது ஒரு தனி மனித உரிமை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • உரிய நடைமுறை மற்றும் சட்டத்தின் அதிகாரத்தைப் பின்பற்றாமல் அரசு அதைக் கைப்பற்ற முடியாது.
  • ஒரு பொதுநல அரசாங்கத்தில், சொத்துரிமை என்பது மனித உரிமையாகக் கருதப் படுகின்றது.
  • அரசானது தனியார் நிலத்தைக் கைப்பற்றி, பின்னர் அதனைச் சொந்தம் கொண்டாடுவது என்பது அரசை ஒரு ஆக்கிரமிப்பாளராக ஆக்குகின்றது.
  • 1978 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 44வது அரசியலமைப்புத் திருத்தமானது 300 - A சட்டப் பிரிவை இணைத்ததன் மூலம் சொத்துரிமையானது அடிப்படை உரிமைப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டது.
  • ஆயினும் கூட, 300 - A சட்டப் பிரிவின் படி ஒரு நபரின் தனிப்பட்ட சொத்தைக் கைப்பற்றுவதற்கு உரிய நடைமுறை மற்றும் சட்டத்தின் அதிகாரத்தைப் பின்பற்ற வேண்டும்.
  • சொத்துரிமையானது தற்போது ஒரு அரசியலமைப்பு சார்ந்த அல்லது சட்டரீதியிலான உரிமையாக மட்டுமல்லாமல், தனி மனித உரிமையாகவும் கருதப்படுகின்றது.
  • நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வானது இந்தத் தீர்ப்பினை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்