தனியார் துறையினால் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது விண்வெளிக் கலன்கள்
August 28 , 2020 1788 days 684 0
“பொருளாதார வெடி பொருட்கள் நிறுவனம்” (Economic Explosives Ltd) என்ற தனியார் துறை நிறுவனத்தினால் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது பினாகா வகை ராக்கெட்டுகள் பொக்ரானில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டன.
இந்த ராக்கெட்டுகள் டிஆர்டிஓ மற்றும் தனியார் துறை ஆகியவற்றிற்கிடையேயான ஒரு தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.
பினாகா என்பது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட பலவகை பீப்பாய் அளவுள்ள ராக்கெட் ஏவு அமைப்பாகும் (multi barrel rocket launcher system). இது இந்திய இராணுவத்திடம் ஏற்கெனவே பணிச் சேவையில் உள்ளது.