தனியார் நிறுவனங்களில் உள்ளூரைச் (சொந்த மாநிலம்) சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு
July 26 , 2019 2118 days 688 0
அனைத்துத் தனியார் தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்திய முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் ஆகும்.
அரசிடமிருந்து நிதியுதவி பெறும் அல்லது பிற உதவிகள் பெறும் நிறுவனங்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைத்து நிறுவனங்களும் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
அரசு – தனியார் பங்களிப்பில் உள்ள தொழிற்துறைப் பிரிவுகள், தொழிற்சாலைகள், கூட்டு முயற்சிகள் மற்றும் திட்டங்களின் அனைத்து வகையிலும் உள்ள 75% தனியார் வேலைகள் ஆந்திரப் பிரதேச மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.