தனியார் நிறுவனங்களுக்கு எதிராக 50 பொதுத்துறை நிறுவனங்கள்
April 19 , 2023 834 days 375 0
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பொதுத்துறை நிறுவனங்களின் (PSUs) நிதி மற்றும் செயல்பாட்டுப் பகுப்பாய்விற்கான ஒரு ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமாக எர்ன்ஸ்ட் & யங்க் எனப்படும் பன்னாட்டு ஆலோசனை வழங்கீட்டு நிறுவனத்தினைத் தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது.
இந்த ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமானது நிதித் துறையில் திட்ட மேலாண்மைப் பிரிவாகவும் செயல்படும்.
நிதி (பொதுத் துறை நிறுவனங்கள் வாரியம்) துறையானது 1982 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
இது பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்களின் நிர்வாகத்தில் கொள்கை சார்ந்த சீர்மை விளங்குவதனை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டது.