தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது ஏவுகலம்
March 22 , 2024 509 days 513 0
தமிழ்நாடு மாநிலத்தில், விண்வெளி நுட்பம் சார் புத்தொழில் நிறுவனங்களில் ஒன்று தனது முதல் ஏவுகலத்தினை விண்ணில் செலுத்தி வரலாறு படைக்கவுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள விண்வெளி நுட்பம் சார் புத்தொழில் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட் அக்னிபான் சார் நிலை சுற்றுப்பாதை தொழில்நுட்ப சோதனை (SOrTeD) தனது முதல் ஏவுகலத்தினை விண்ணில் ஏவ உள்ளது.
அக்னிபான், தனியார் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ள இந்தியாவின் முதல் ஏவுதல் ஆகும்.
இது இந்தியாவின் முதல் பகுதியளவு கிரையோஜெனிக் எந்திரம் மூலம் இயங்கும் ஏவுகல ஏவுதல் செயல்பாடு ஆகும்.
மேலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் முப்பரிமாண முறையில் முழுமையாக அச்சிடப்பட்ட என்ஜின் இதுவாகும்.