2019 ஆம் ஆண்டில் நடைபெறும் பொதுத் தேர்தலுக்காக சமூக வலைதளங்கள் மற்றும் இந்திய இணையதள கைபேசி மன்றமானது (Internet and Mobile Association of India - IAMAI) “தன்னார்வ நெறிமுறைக் குறியீடுகளை” இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையமானது சமூக வலை தளங்களுடன் இணைந்து அறிவிக்கை செயல்முறையை மேம்படுத்தியுள்ளது.
இந்தச் செயல்முறையின் கீழ், இந்தியத் தேர்தல் ஆணையமானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 126-ன் படி விதிமீறல்கள் குறித்து சமூக வலை தளங்களுக்கு தெரிவிக்கும்.