TNPSC Thervupettagam

தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம்

January 10 , 2023 952 days 405 0
  • தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டத்திற்கான (V-VMP) தேசிய ஒற்றைச் சாளர அமைப்பில் 11 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இணைந்துள்ளன.
  • இது மகிழுந்துகளின் மறுசுழற்சிக்கான சுற்றுச்சூழல் அமைப்பில் வெகுவாக தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும்.
  • பழைய வாகனங்களின் அகற்றல் கொள்கை என்பது பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை அகற்றி, இந்தியச் சாலைகளில் நவீன மற்றும் புதிய வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கச் செய்வதற்காக தொடங்கப்பட்டு, அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படும் திட்டமாகும்.
  • நாட்டில் குறைந்த கரியமில வெளியீட்டுத் தடத்தினை அடைவதற்காகத் தகுதியற்ற மற்றும் மாசுபடுத்தும் வகையிலான வாகனங்களைப் படிப்படியாக அகற்றுவதற்கான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே இந்தக் கொள்கையின் முதன்மையான குறிக்கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்