தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியை மறுத்தல் அல்லது ரத்து செய்தல்
November 17 , 2024 301 days 240 0
வளர்ச்சி மேம்பாட்டிற்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் கட்டாய மத மாற்றங்களில் எந்தவொரு தன்னார்வத் தொண்டு நிறுவனமும் ஈடுபட்டாலும், 2010 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் (FCRA) கீழ் அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும்.
அரசு சாராத அமைப்பிற்கான (NGO - தன்னார்வத் தொண்டு நிறுவனம்) வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டப் பதிவை மறுக்க அல்லது ரத்து செய்வதற்கான 17 காரணங்களை உள்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
சமூக அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கக் கூடிய வகையிலான வெளிநாட்டு நிதியுதவியை ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் FCRA பதிவும் ரத்து செய்யப்பட வேண்டும்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களின் படி, எந்தவொரு வெளிநாட்டு நிதியையும் அதன் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட அவற்றின் FCRA பதிவு ரத்து செய்யப்படும்.