November 29 , 2025
13 days
91
- ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) அனைத்து உறுப்பினர் நாடுகளிலும் தன் பாலினத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று EU நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- ஜெர்மனியில் நடைபெற்ற இரண்டு போலந்து குடிமக்களுக்கு இடையேயான திருமணத்தைப் பதிவு செய்ய போலந்து மறுத்ததை அடுத்து இந்தத் தீர்ப்பு வந்தது.
- இந்த அங்கீகாரத்தை மறுப்பது இடம் பெயர்வதற்கான சுதந்திரத்தையும் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கைக்கான உரிமையையும் மீறுகிறது.
- EU குடிமக்கள் ஒரு இடம் பெயர்ந்து குடியேறிய நாட்டிலும் மற்றும் வீடு திரும்பியதும் "வழக்கமான குடும்ப வாழ்க்கையை" தொடரலாம்.
- வெளிநாட்டுத் திருமணங்களை அங்கீகரிக்கும் போது உறுப்பினர் நாடுகள் தன் பாலின இணையர்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட முடியாது.

Post Views:
91