TNPSC Thervupettagam

தபால் மூலம் வாக்களிப்பு

January 19 , 2022 1280 days 469 0
  • இந்திய தேர்தல் ஆணையமானது, பத்திரிகையாளர்கள் தபால் மூலம் வாக்களிக்கச் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது.
  • தபால் வாக்களிப்பு வசதியைத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு வாக்காளரும் வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாது.
  • இது 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப் படுகிறது.
  • தற்போது, ​​பின்வரும் வாக்காளர்களும் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க அனுமதிக்கப் படுகிறார்கள்.
    • சேவைப் பணியில் உள்ள வாக்காளர்கள் (ஆயுதப் படைகள், மாநிலத்தின் ஆயுதம் ஏந்திய காவல் படை மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள்),
    • தேர்தல் பணியில் உள்ள வாக்காளர்கள்,
    • 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள்,
    • தடுப்புக் காவலில் உள்ள வாக்காளர்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்