சமீபத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சகமானது மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தபால் வாக்கைக் கோரும் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பைக் குறைத்துள்ளது.
தற்பொழுது, 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அல்லது கோவிட் – 19 நோய்த் தொற்று இருக்கும் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் தபால் வாக்கைக் கோர முடியும்.
இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில், மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களின் போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மத்திய சட்டத்துறை அமைச்சகம் திருத்தியிருந்தது.
இந்தத் திருத்தப்பட்ட விதிகளின் மூலம் பயனடையும் முதலாவது வாக்காளர்கள் பீகார் மாநில வாக்காளர்கள் ஆவார்.
இந்தியாவில் கொரானா வைரஸ் நோய் பாதிப்பிற்குப் பிறகு சட்டசபைத் தேர்தலைக் காண இருக்கும் முதலாவது மாநிலம் பீகார் ஆகும்.