TNPSC Thervupettagam

தமிழக Gig தொழிலாளர்கள் குறித்த ஆய்வு

March 13 , 2026 4 days 109 0
  • தமிழ்நாடு மாநில திட்டக் குழு, இணைய தளம் சார்ந்த Gig தொழிலாளர்களின் நிலை குறித்த ஆய்வை வெளியிட்டு, அவர்களின் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
  • Gig தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களின் கோரிக்கைகளை முன்வைக்க தொழிற் சங்கங்களை உருவாக்க சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
  • சுகாதாரக் காப்பீடு, மகப்பேறு ஆதரவு, ஓய்வூதியங்கள், மாற்றுத்திறன் மற்றும் விபத்து இறப்புச் சலுகைகள் போன்ற சலுகைகளை உள்ளடக்கிய சமூகப் பாதுகாப்பு நிதிகளை உருவாக்க இது பரிந்துரைக்கிறது.
  • e-Shram அமைப்பில் Gig தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று இக்குழு முன்மொழிகிறது.
  • 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், அரசால் நியமிக்கப் பட்ட குறை தீர்ப்பாளருடன் கூடிய உள் விவாதத் தீர்வு குழுக்களை அமைக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்