தமிழகத்தின் ஒட்டு மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன்
March 7 , 2022 1254 days 720 0
ஒட்டு மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனில் கர்நாடகாவை விஞ்சி, தமிழகம் முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்றைய நிலவரப்படி, தமிழகத்தின் முழு அளவு புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்தித் திறனானது 15,914 மெகாவாட் ஆக உள்ளது.
கர்நாடகாவின் மொத்த தூய எரிசக்தி திறன் 15,795 மெகாவாட் ஆகும்.
சமீப ஆண்டுகளில், கர்நாடகாவுக்குப் பதிலாக முதலிடத்தை மீண்டும் பெறுவதற்காக சூரிய மற்றும் காற்றாலை எரிசக்திப் பிரிவுகளில் தனது உற்பத்தித் திறனை தமிழகம் அதிகரித்துள்ளது.