தமிழகத்தின் கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பு 2024
February 29 , 2024 523 days 539 0
2024 ஆம் ஆண்டின் இந்திய கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பின் (GBBC) போது தமிழ்நாட்டில் 350க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்களில் 355 பறவை இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
கோவையில் அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்கள் (268) பதிவு செய்யப் பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து சேலம் (203), செங்கல்பட்டு (172), ஈரோடு (147) ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் உள்ள 37 மாநிலங்களுள், 348 இனங்கள் மற்றும் 3,804 பட்டியல்களுடன் தமிழ்நாடு 7வது இடத்தில் உள்ளது.